search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணும் எழுத்தும்"

    • ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
    • பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 மற்றும் 4-ம் வகுப்பு கற்று தரும் ஆசிரியர்களுக்கு கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் நடராஜ் தலை மையில், மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதனை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவ னத்தின் முதல்வர் வெள்ளைத்துரை நேரில் பார்வையிட்டார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் செய்தி ருந்தனர். பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் நன்றி கூறினார்.

    • அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களும் அடிப்படை மொழித்திறன் பெற வேண்டும்.
    • திருப்பூரில் உள்ள 14 ஒன்றியங்களில் இருந்தும் 82 கருத்தாளா்கள் பங்கேற்கின்றனா்.

    திருப்பூர் :

    எண்ணும் எழுத்தும் கருத்தாளா்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் திருப்பூரில் தொடங்கியது. தமிழகத்தில் 1 முதல் 3 ம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களும் அடிப்படை மொழித்திறன் பெற வேண்டும் என்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் வரும் 2023-24 ம் கல்வியாண்டு முதல் 4 மற்றும் 5 ஆம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், திருப்பூா் பள்ளி கல்வித் துறை ஆகியன இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் திட்ட கருத்தாளா்களுக்கான பயிற்சி முகாம் கே.எஸ்.சி.மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இதில், முதல் நாளில் கணிதம் மற்றும் அறிவியல் பாட கருத்தாளா்களுக்கு பயிற்சி நடைபெற்றது. ஆங்கில பாட கருத்தாளா்களுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமையும், தமிழ், சமூக அறிவியல் பாட கருத்தாளா்களுக்கான பயிற்சி சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

    பயிற்சியை திருப்பூா் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் வீ.சங்கா் தொடங்கிவைத்தாா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அமுதா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். இதில் ஒவ்வொரு பாடத்துக்கும் திருப்பூரில் உள்ள 14 ஒன்றியங்களில் இருந்தும் 82 கருத்தாளா்கள் பங்கேற்கின்றனா். இதைத்தொடா்ந்து, ஜூன் முதல் வாரத்தில் ஒன்றிய அளவிலான கருத்தாளா்களுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள 4 மற்றும் 5 ம் வகுப்பு எண்ணும் எழுத்தும் ஆசிரியா்கள் பங்கேற்கவுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவிற்கு சென்னி மலை வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகேசன் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பு அம்சங்களை எடுத்து ரைத்தார்.

    மேலும் சென்னிமலை வட்டார வள மேற்பார்வையாளர் கோபிநாத் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    பள்ளி ஆசிரியை ஆஷா குட்டி மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் வகுப்பறை களங்கள் பற்றி செயல்விளக்கம் அளித்தார். மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

    நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊர் பொது மக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

    • பாடவாரியாக 12 கருத்தாளர்கள் வீதம் 36 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.
    • எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சியானது 15 வேலம்பாளையம் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் 62 தொடக்க பள்ளிகள் மற்றும் 32 நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்புகள் வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் 238 பேருக்கு எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சியானது 15 வேலம்பாளையம் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    முதல் நாள் பயிற்சியில் கணிதப்பாடம் மற்றும் இரண்டாம் நாள் பயிற்சியில் தமிழ் பாடத்திற்கும் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர் கையேடு ஆராய்தல் செயல்பாடு, மாதிரி வகுப்பறை குறித்து கற்பிக்கப்பட்டது.தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கு பாடவாரியாக 12 கருத்தாளர்கள் வீதம் 36 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.

    திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

    • மூன்றாம் பருவத்திற்கான “எண்ணும் எழுத்தும்” வட்டார அளவிலான பயிற்சி நடைபெற்று வருகிறது
    • தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3பாடங்களுக்கான பயிற்சி 3 நாட்கள் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான "எண்ணும் எழுத்தும்" வட்டார அளவிலான பயிற்சி நடைபெற்று வருகிறது 

    பல்லடம் ஒன்றியத்தில்1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். பல்லடம் வட்டார கல்வி அலுவலர்கள் சசிகலா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து பயிற்சியிலும் கலந்துகொண்டனர். எண்ணும் எழுத்தும் பயிற்சியின் அவசியம், கற்பித்தல் செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிக்கூறினர்.

    தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3பாடங்களுக்கான பயிற்சி 3 நாட்கள் வழங்கப்படுகிறது. மாணவர்களது கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல்நாள் பயிற்சியை திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அமுதா பார்வையிட்டு வகுப்பறை கற்றல் கற்பித்தலில் எத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதன் மூலம் மாணவர்களது கற்றலை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கினர். இப்பயிற்சிக்கு பல்லடம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அங்கயர்கண்ணி, சாரதா, மாரியப்பன், மதுமிதா, சிந்தியா, ரஞ்சிதம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

    • 302 பேருக்கு வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் 302 பேருக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்டம் பயிற்சி முகாம் தனியார் பள்ளியில் நடந்தது.

    இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

    உடன் போளூர் வட்டார கல்வி அலுவலர் சுந்தர், நேரு, விரிவுரையாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுநர் சேகர், பாஸ்கரன், ஆசைத்தம்பி, சுரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பயிற்சி மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் மலர்விழி பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் 4 ஆயிரம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட கையேடுகள் வழங்கப்பட்டது.
    • எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடந்தது. ஆசிரியை ஆனந்தவல்லி வரவேற்றார்.

    புத்தகங்களை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி பேசியதாவது:-

    நடப்பு கல்வியா ண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    2025-ம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு ஆகும்.

    இதற்காக மாணவர்களுக்கு சிறப்புக் கையேடுகள் அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு படிக்கும் 1272 மாணவர்களுக்கும், 2-ம் வகுப்பு படிக்கும் 1509 மாணவர்களுக்கும், 3-ம் வகுப்பு படிக்கும் 1514 மாணவர்களுக்கும் என மொத்தம் 4295 மாணவ-மாணவிகளுக்கு இந்த கையேடு வழங்க ப்பட்டுள்ளது.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்றுக் கற்பதை பெற்றோர் அறியும்வகையில் வகுப்பறையைப் பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளின் தனித்திறன்கள் வகுப்பறையில் ஊக்குவிக்கப்படுவது குறித்து விளக்கிக் கூறுவதோடு குழந்தைகளின் திறன்களைப் பெற்றோர் காணும்வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    இந்த கருத்துக்களை முதன்மைப்படுத்தி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு) வகுப்பு வாரியாக பெற்றோர் கூட்டம் நடத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆசிரியை ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    நன்னிலம்:

    நன்னிலம் வட்டாரத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் ஐந்து நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருக பாஸ்கர் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

    129 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்வட்டார வளமைய மேற்பார்வை யாளர் நடேஷ் துரை வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் புஷ்பா நன்றி கூறினார்.

    ×